ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா: திமுகவினரும், டி.டி.வி. ஆதரவாளர்களும் முற்றுகையால் பரபரப்பு!

சென்னை கொருக்குப்பேட்டை மன்னப்பன் தெருவில் ஒரு மணி நேரமாக இப்பகுதியில் திமுகவினரும், டி.டி.வி ஆதரவாளர்களும், ஒரு வீட்டை முற்றுகையிட்டனர். அந்த வீட்டில் ஆளுங்கட்சியினர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து அந்த வீட்டில் இருந்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் வீடு, ஸ்கூட்டர் தருவதற்கான விண்ணப்பம் தருவதாக முற்றுகையிட்டனர்.
எதிர்கட்சியினர் வந்ததும் அந்த வீட்டில் இருந்து சிலர் தப்பி ஓடும் போது சில ஆவணங்கள், பணத்தை விட்டு சென்றதாக எதிர்கட்சிகள் காவல் துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரமாக காவல் துறை மற்றும் பறக்கும் படை, தேர்தல் அதிகாரிகள் வரவில்லை. தற்போது தான் வந்துள்ளதாக குற்றம் சாட்டினர்.
-படங்கள்: அசோக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *