இந்தியாவின் பணக்கார மாநிலங்கள், ஏழை மாநிலங்கள் எதெல்லாம் தெரியுமா? – சுவாரசிய பட்டியல்

டெல்லி: இந்தியாவின் பணக்கார மற்றும் ஏழை மாநிலங்கள் எவை என்பது குறித்த ஒரு பொருளாதார ஆய்வை வெளியிட்டுள்ளது இந்தியா டுடே ஊடகம். 2015-16ம் ஆண்டின் பொருளாதார புள்ளி விவர அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2015- நடத்திய ஆய்வு. நாட்டிலேயே மிகப்பெரிய பொருளாதார சக்திகளாக உள்ள மாநிலங்களில் 2வது இடத்தில் இருப்பது தமிழகம் உள்ளது. தமிழக மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.9.48 லட்சம் கோடியாகும்.
வறுமைக்கோடு அதிக மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மாநிலங்களின் அடிப்படையில், வறுமையான மாநிலங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், 39.9 சதவீதத்துடன் சட்டீஸ்கர் முதலிடத்தில் உள்ளது. ஜார்கண்ட் 37 சதவீதத்துடன் 2வது இடத்தில் உள்ளது.

கேரளாவுக்கு 2வது இடம் குறைவான மக்களே வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள மாநிலங்கள் பணக்கார மாநிலங்களாக பரிசீலிக்கப்படுகின்றன. அந்த வகையில் 5.1 சதவீதம் பேர்தான் வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள கோவா முதலிடம் பிடித்துள்ளது. கேரளா, சிக்கிம், ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஆந்திரா, புதுச்சேரி, டெல்லி, ஜம்மு காஷ்மீர், ஹரியானா ஆகிய மாநிலங்கள் முறையே, 2வது முதல் 10வது இடங்களை பிடித்துள்ளன.

ஹிமாச்சல பிரதேசம் சிறப்பு அனைத்து துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் மாநிலம் என்று ஹிமாச்சல பிரதேசத்தை இந்தியா டுடே ஊடகம் தேர்ந்தெடுத்துள்ளது. விவசாயம், கல்வி, ஆரோக்கியம், உள்கட்டமைப்பு போன்ற பல துறைகளுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பிரிவில் தமிழகம் தேர்வாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *