கஜா புயல் நிவாரணம் – பொதக்குடி ஐ அ அ ஜமாஅத் சார்பில் 1200 நபர்களுக்கு மதிய உணவு

பல லட்சம் மக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட கஜா புயலின் கோரத்தாண்டவத்திற்கு நாகை, திருவாருர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் பெருமளவளில் பாதிக்கப்பட்டு, பல்வேறு தொண்டு நிறுவனங்கள், பொதுநல அமைப்புகளால் உதவிக்கரம் நீட்டப்பட்டு, அடிப்படை வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்களை இயல்பு நிலைக்கு கொண்டுவர பல பகுதிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மனித நேயமும் மத நல்லிணக்கமும் தழைத்தோங்கும் திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில், பொதக்குடியை வாழ்வாதாரமாக கொண்ட அதங்குடி ஏழை எளிய மக்களுக்கு அமீரகத்தில் வாழும் பொதக்குடி சகோதரர்கள் (பொதக்குடி ஐ அ அ ஜமாஅத்) சார்பில் 1200 நபர்களுக்கு இன்று மதிய உணவு ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது

அதற்கான ஏற்பாடுகளை பொதக்குடியிலுள்ள அனைத்து பொதுநல மன்றங்களும், அமைப்புகளும், கஜா புயல் நிவாரண பணி குழுவுடன் இணைந்து செய்தனர்.

மத நல்லிணக்கமும் மனித நேயமும் மென்மேலும் தழைத்தோங்க இறைவனை பிரார்த்திப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *