சாதி மறுப்புத் திருமணம் செய்தோரை பிரிக்க பெற்றோர்களுக்கு உரிமை கிடையாது – சுப்ரீம் கோர்ட் அதிரடி

டெல்லி: சாதி மறுப்புத் திருமணம் செய்தோரை கேள்வி கேட்கவோ, பிரிக்கவோ யாருக்கும் அதிகாரம் கிடையாது. அதுபோல செய்வது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கட்டப் பஞ்சாயத்து மூலமோ, கிராமப் பஞ்சாயத்து மூலமோ, சமுதாயப் பெரியவர்கள் என்ற பெயரிலோ யாருமே இதைக் கேள்வுி கேட்கக் கூடாது. அதற்கு அவர்களுக்கு உரிமை கிடையாது. பெற்றோர்களுக்கும் கூட காதல் திருமணம் செய்வோரை கேள்வி கேட்கும் அதிகாரம் கிடையாது என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு உடனடியாக காதல் திருமணம் செய்வோரைக் காக்கும் வகையிலான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும். அப்படிச் செய்ய மத்திய அரசு தவறினால் கோர்ட் தலையிடும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும் விவரங்கள் விரைவில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *