தர்மபுரி சவுமியா கொடூர பலாத்காரம்.. மரணம்.. கோபத்தின் உச்சியில் பழங்குடியின மக்கள்

தருமபுரி மாணவி வன்புணர்வு ஒரு குற்றவாளி கைது: சவுமியாவின் மரணம்… பழங்குடி மக்களின் கோபத்தை உச்சத்திற்கு கொண்டு சென்று இன்று தருமபுரி மாவட்டத்தையே உலுக்கி எடுத்து வருகிறது. கடந்த 2 தினங்களாக தமிழகத்தை உலுக்கி வரும் சம்பவம் சவுமியா படுகொலைதான். அரூர் கோட்டப்பட்டியில் அண்ணாமலை – மலர் தம்பதியினரின் மகள்தான் சவுமியா. அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். பழங்குடி இனத்தை சேர்ந்தவர் சவுமியா. தருமபுரி மாணவி வன்புணர்வு.. ஒரு குற்றவாளி கைது.. விசாரணை அதிகாரி அதிரடி மாற்றம்!

காயங்கள், ரத்தங்கள் இந்நிலையில், கடந்த 6-ம் தேதி ரமேஷ், சதீஷ் என்ற காம மிருகங்களால் பாலியல் பலாத்காரம் செய்தனர். இருவரும். அவர்களிடமிருந்து தன்னை காத்து கொள்ள சவுமியா போராடினாள். ஆனால் கயவர்கள் இதனால் ஆத்திரம் அடைந்து கொடூரமாக தாக்கினார்கள். உடம்பெல்லாம் காயங்கள், ரத்தமாக வழிந்த நிலையில் பெற்றோரிடம் சவுமியா முறையிட, செய்வதறியாது தவித்த அவர்களும் கோட்டப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.

எப்ஐஆர் தாக்கல் ஆனால் இதை போலீசார் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. கண்ணீரும், வெறுப்பும், ஆதங்கமும் அடைந்த பெற்றோர் கலெக்டர் ஆபீசில் புகார் எண்ணில் தங்கள் குறையை பதிவிட்டார்கள். பிறகுதான் விஷயம் சீரியஸானது. கோட்டப்பட்டி போலீசார் எப்.ஐ.ஆர் தாக்கல் செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.

24 கிராம மக்கள் சவுமியாவை தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் கயவர்களின் அளவுகடந்த காயங்களால் உடல் மோசமடைந்த சவுமியா பரிதாபமாக உயிரிழந்தார். போலீசாரை கண்டித்து ஊர் மக்கள் மறியல் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்கு ஆதரவாக 24 கிராம மக்களும் திரண்டுவிட்டதால் போலீசார் மிரண்டனர். விவகாரம் இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

சரமாரி புகார்கள் விரைந்து வந்த கலெக்டரிடம், சவுமியாவின் உடலை வாங்க மாட்டோம், உடலை வெளிமாவட்டத்தில்தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதன்படியே கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. அப்போது ஒட்டுமொத்த மக்களும் வைத்த முதன்மையான கோரிக்கை வழக்கை விசாரித்து வரும் கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணனை மாற்ற வேண்டும் என்பதுதான். இன்ஸ்பெக்டர் மீது சரமாரியான புகார்களை மக்கள் அள்ளி வீசினர்.

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் பெற்றோர் புகாரை கொடுத்தும் முத்துக்கிருஷ்ணன் உடனடியாக கேஸ் பதிவு செய்யவில்லை என்று முதல் குற்றச்சாட்டை கூறினர். 2 குற்றவாளிகளையும் கைது செய்யாமல், அவர்களிடம் பணத்தை வாங்கி கொண்டு தப்பித்து விட்டதாக இரண்டாவது குற்றச்சாட்டை கூறினர். சவுமியா கற்பழிப்பு வழக்கை பாலியல் பலாத்கார முயற்சி என்று பதிவு செய்ய முயன்றதாக மூன்றாவது குற்றச்சாட்டை கூறினர். இப்படி ஒரு அதிகாரி சவுமியா வழக்கை விசாரிக்ககூடாது, அவரை சஸ்பெண்ட் செய்தே ஆக வேண்டும் என்று ஒருமித்த குரல் பலமாக எழுந்தது. இதையடுத்துதான், தற்போது இவர் மாற்றப்பட்டு, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணை அதிகாரியை இப்படி மாற்றி உத்தரவிட்டது மாவட்ட எஸ்.பி. என்று கூறப்படுகிறது.

தலைவர்கள் கண்டனம் இது சம்பந்தமாக பெற்றோர் புகார் கொடுத்த உடனேயே போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் சவுமியாவை காப்பாற்றியிருக்கலாம் என ஊர் மக்கள் கதறுகிறார்கள். காவல்துறையின் அலட்சியத்துக்கு ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். தற்போது காம அரக்கர்களில் ஒருவரான சதீஷை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

ரமேஷூக்கு வலை மற்றொரு ரமேஷ் என்ற மிருக்கத்தை தேடி வருகிறார்கள். சத்தியமங்கலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததால் அங்கே தனிப்படையுடன் போலீசார் விரைந்துள்ளனர். எங்கோ இருந்த பழங்குடி மக்கள் இன்று வெகுண்டெழுந்து விட்டார்கள்!! இவர்களின் கோபமும், ஆத்திரமும் நியாயமானதே.. எப்படி இருந்தாலும் சவுமியாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அனைவரது எதிர்ப்பாக உள்ளது.

News Source: https://tamil.oneindia.com/news/dharmapuri/student-sowmya-molested-case-trial-officer-was-transferred-in-arur/articlecontent-pf336213-334019.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *