
இந்தநிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தி.மு.க. பொருளாளர் துரை முருகன் சந்தித்து நிவாரண நிதியை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறியதாவது : புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு திமுக துணை நிற்கும். மேலும் மத்திய அரசிடம் தைரியமாக நிதி கேட்டால் தேவையான நிதி கிடைக்கும் என்றார். இதே போல், கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் சார்பில் அவர்களின் ஒரு மாத ஊதியம் நிதியாக தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
News Source: https://tamil.oneindia.com/news/chennai/dmk-treasurer-duramurugan-meets-cm-palanisamy-334717.html