திருவாரூரில் பிப்ரவரி 7க்குள் இடைத்தேர்தல்? தேர்தல் ஆணையம் தகவல்!!

கலைஞர் மறைவுக்கு பின் திருவாரூர் தொகுதிக்கும் அதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில் எம்.எல்.ஏக்கள் இல்லாத இந்த இரண்டு தொகுதிகளுக்கும் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என மதுரையை சேர்ந்த  கேகே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதிக்குள் திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் விளக்கம்கூறப்பட்டுள்ளது.

வரும் பிப்ரவரி 7 ஆம் தேதிமுதல் 6 மாதம் முடிவடைவதால் அதற்கு முன் திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்தப்படும், அதேபோல் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ மறைவு தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளதால் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்த முடிவுகள் இன்னும் பரிசீலிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

 

News Source: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tiruvarur-by-election-details-election-commission-information-answer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *