பிரதமர் என்பதை மோடி மறந்துவிட்டாரா? ப.சிதம்பரம் கேள்வி

தேநீர்விற்பேன், தேசத்தை விற்கமாட்டேன் என குஜராத் தேர்தல் பரப்புரையில் மோடி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் தான் பிரதமர் என்பதை மோடி மறந்துவிட்டாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று தனது டிவிட்டர் பதிவில் அவர் கூறியதாவது,

தனது கடந்த காலங்களை பற்றியே நரேந்திர மோடி பரப்புரை செய்து வருகிறார். குஜராத் தேர்தல் என்பது மிஸ்டர் மோடிக்காக நடப்பது அல்ல; தனிப்பட்டது. 42 மாதங்களில் நல்ல காலம் வரும் என பிரதமர் மோடி உறுதியளித்தது என்ன ஆனது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *