பொதக்குடியில் கஜா புயல் நிவாரண சேவை

கஜா புயலால் பொதக்குடியிலும் எண்ணெற்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. புயலால் ஏற்பட்ட இடர்பாடுகளை உள்ளூர் வாலிபர்கள் அரசை எதிர்பார்க்காமல் ஒவ்வொருவரும் தானே முன்வந்து துரிதமாக செயல்பட்டு அனைத்து இடர்பாடுகளையும் களைந்தார்கள்.

புயலடித்த தினம் முதல் இன்று வரை மின்சாரம் இல்லாத காரணத்தால் தண்ணீரின்றி அவதியில் இருந்த பொதக்குடி மக்களுக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் பொதக்குடி சகோதரர்கள் ஒன்றிணைந்து பொதக்குடி மக்களின் முக்கிய தேவையாகிய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ஒரே நாளில் அதற்குத்தேவையான பொருளாதாரம் திரட்டி 8க்கும் மேற்பட்ட ஜெனரேட்டர்களை வெளியூரிலிருந்து வரவழைத்து பொதக்குடி அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல மன்றங்களின் ஒத்துழைப்புடன் இரவு பகல் பாராது வீடு வீடாக சென்று ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பி கொடுத்தது அப்பகுதி மக்களிடையே மிகுந்த சந்தோஷத்தை வரவழைத்ததுடன் வரவேற்பையும் பெற்றுத்தந்தது.

இதில் உள்ளூர் அமைப்பைச்சேர்ந்தவர்கள் மற்றும் பொதுநல மன்றங்களின் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது.

மேலும் இந்நிலை தொடருமானால், ஊர் மக்களின் இதர அன்றாட அடைப்படை தேவைகளையும் பூர்த்தி செய்ய இந்த ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் பொதக்குடி சகோதரர்கள்

உள்ளூர் சகோதரர்களின் ஒத்துழைப்புடன் தயார் நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இதற்காக சிங்கப்பூர் வாழ் பொதக்குடி சகோதரர்களும் தங்களின் பொருளாதார பங்களிப்பை இந்நிவாரணத்திற்காக வழங்கியுள்ளார்கள்.

 

அல்லாஹ் இவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை தந்தருள்வானாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *