பொதக்குடி ஜமாஅத் ஐக்கிய அரபு அமீரக அமைப்பின் ஐக்கிய அரபு அமீரக 46-ம் தேசிய தின ஒன்றுகூடல் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், நமது பொதக்குடி ஜமாஅத் அமைப்பின் தேசியதின ஒன்றுகூடல் நிகழ்ச்சி துபாய் ஜபீல் பார்க்கில் சிறப்பாக நடந்து முடிந்தது.

சுமார் 150-க்கும் மேற்பட்ட நமதூர் சகோதரர்கள் குடும்பத்துடன் பெருந்திரளாக கலந்துகொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மார்க்க அறிவுத்திறன் போட்டி, உணவு பரிமாற்றம், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பல்வேறு விளையாட்டு
போட்டிகள் அதைனை தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சிகள் என கொஞ்சம்கூட சளைக்காமல் வருகைபுறிந்திருந்த அனைவரும் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.

முதலில் நமது ஜமாஅத் தலைவர் MPH அப்துர்ரஷீது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். நமது சகோதரர்களின் ஒற்றுமை பற்றியும், அமீரகத்தில் இயங்கும் இரு ஜமாஅத்-களை ஒருங்கிணைப்பதன் அவசியம் பற்றியும் SS அஷ்ரஃப் அலி அவர்களும், அமீரகம் வருகை புரிந்துள்ள ஜன்னத்துல் ஃபிர்தெளஸ் பள்ளியின் முத்தவல்லி SM கமாலுதீன் அவர்களும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

நிகழ்ச்சியில் எதிர்பாராத தருணமாக, கடந்த மூன்றாண்டு கால நமது ஜமாஅத்தின் சீரிய செயல்படுகளை பாராட்டி, ஜமாஅத் நிர்வாகிகளுக்கு துபாய் நண்பர்கள் நினைவு பரிசுகள் வழங்கினார்கள்.

இறுதியில் நமது ஜமாஅத் செயலாளர் AMS ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தி நிறைவு துஆ ஓதி நிகழ்ச்சி நிறைவுசெய்யப்பட்டது.

இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நமதூர் சகோதரர்கள் அதிகமதிகமாக கலந்துகொண்டு ஒற்றுமையுடன் செயல்பட அல்லாஹ் அருள் புரிவானாக!

எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *