பொய்தான் மோடி அரசின் தனித்தன்மை! – பாஜக மூத்த தலைவர் அருண் ஷோரி

பொய் சொல்வதுதான் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் தனித்தன்மை என பாஜக மூத்த தலைவர் அருண் ஷோரி பேசியுள்ளார்.

பா.ஜ.க. மூத்த தலைவரும், வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவருமான அருண் ஷோரி, டெல்லியில் நடைபெற்ற விழாவொன்றில் கலந்துகொண்டு பேசியபோது, ‘மோடியைப் பற்றி நிறைய சொல்லலாம். செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரம் கொடுக்கிறவர் அவர். அதில் முத்ரா திட்டத்தின் மூலமாக மட்டுமே ஐந்தரை கோடி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்ததாக அரசுதரப்பு செய்தி வெளியிடப்பட்டிருக்கும். நாம் இதையெல்லாம் பார்த்து ஆச்சர்யப்படத் தேவையில்லை. மோடி அரசின் தனித்தன்மையே பொய் பேசுவதுதான். ஒரு தலைவரோ அல்லது நபரோ அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதை அவர் செய்யும் வேலையை வைத்து நிமிடத்தில் கணித்து விடமுடியும்.
காந்தி குறிப்பிட்டுச் சொல்வார், ஒருவர் என்ன செய்கிறார் என்பதை விடுத்து அவரது பண்புகளை வைத்து ஆதரிக்கலாம் மற்றும் அவரது பண்புகளின் மூலமாக நாம் என்ன கற்றுக்கொள்கிறோம் என்பது அதில் முக்கியமான விஷயம் என்று.
ஆனால், இந்த இரண்டுமே நம் நாட்டின் பிரதமர்களாக இருந்த, இருக்கும் வி.பி.சிங் மற்றும் நரேந்திர மோடியிடம் இல்லை. அவர்கள் மேடையில் நிற்கும் சமயத்தில் என்ன தோன்றுகிறதோ அப்படியே பேசக்கூடியவர்கள். அதனால் பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டிருப்பதோ மக்கள் மட்டும்தான் என குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *