கால் ஊன்றுவது இருக்கட்டும்.. பாஜகவால் தமிழகத்தில் கையை கூட ஊன்ற முடியாது: ஸ்டாலின் விளாசல்

சங்கரன்கோவில்: தமிழகத்தில் பாஜகவால் கால் மட்டுமல்ல, கையை கூட ஊன்ற முடியாது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலில் திமுக பிரமுகரின் இல்லத் திருவிழாவில் லந்து கொண்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசினார்.
ஸ்டாலின் பேசியதாவது: அதிமுகவை போல் திமுகவில், எடுத்த உடன் யாரும் முதல்வராக முடியாது. திமுகவில் உழைத்து, படிப்படியாகத்தான் வளர முடியும். இங்கு பதவி முக்கியமில்லை. கொள்கையும், கோட்பாடுமே முக்கியம். தமிழகத்தில் இதற்கு முன் நடத்தப்பட்ட வருமானவரி சோதனைகளின் தற்போதைய நிலவரம் என்ன ஆனது என்ற தகவலே இல்லை. என்ன செய்தாலும் சரி தமிழகத்தில் பாஜகவால் கால் ஊன்ற முடியாது. கால் அல்ல, கையை கூட பாஜக ஊன்ற முடியாது. இன்று ஆளுங்கட்சியை விட மக்கள் திமுகவைதான் திட்டுகிறார்கள், ஏன் இந்த ஆட்சிக்கு இன்னும் முடிவுகட்டவில்லையென்று. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் நலனுக்காக பாடுபடும் ஒரே கட்சி திமுக தான். நாங்கள் தொடர்ந்து மக்களுக்காக பாடுபடுவோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *